கொண்டைக்கடலை மசாலா சுண்டல்,Bengal Gram Masala Sundal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையானப்  பொருட்கள்

கொண்டைக் கடலை                                  -              2 கப்

தேங்காய் துருவல்                                     -              2 மேஜைக்கரண்டி

வறுத்து பொடித்துக்கொள்ள

கடலைப் பருப்பு                                            -              2 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்                                                –            1 மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய்                                           -              3

உப்பு                                                               -              தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய்                                                                1 மேஜைக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு                               -              தாளிக்க

கறி வேப்பிலை                                             -              5 இலை

பெருங்காயம்                                                -              2 சிட்டிகை அளவு

செய்முறை

கொண்டைக்கடலையை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்ளவும். 

பின்பு அவற்றை ஒன்றாக சேர்த்து பெடித்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் கரு வேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்

அதனுடன் பொடித்த மசாலா மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்

சுவையான கொண்டைக் கடலை சுண்டல் ரெடி!

 

Chick Peas Health Benefits And Minerals

.