வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்,White Bengal Gram Sundal

Posted in தானிய வகை ரெசிபிகள்


என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக் கடலை         -       1/2 கிலோ,

கச கசா                                      -       1/2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய்                         -       5,

வறுத்து பொடித்த வெந்தயம்           -       1 டீஸ்பூன்,

சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி    -        1 டீஸ்பூன்,

துருவிய தேங்காய்                       -       1/2 மூடி,

கடலைப் பருப்பு                           -       1 டேபிள்ஸ்பூன்,

கொத்த மல்லித்தழை                     -       சிறிது,

உப்பு                                         -       தேவைக்கு.

தாளிக்க...

கடுகு                                                             -      1டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு                           -      1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை                             -      சிறிது,

பெருங்காயம்                              -      1 சிட்டிகை,

காய்ந்த மிளகாய்                          -      1

எண்ணெய்                                  -      சிறிதளவு.

செய்முறை:

*கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

*பிறகு குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஊறவைத்த கடலைப் பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*இந்தக் கலவையுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடம் பிசறி வைக்கவும்.

*காய்ந்த மிளகாய், வெந்தயத்தை எண்ணெயில் வறுத்து, பொடித்து பிசறி வைத்துள்ள கொண்டைக்கடலையுடன் தூவிக் கிளறவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும். அத்துடன் பிசறி வைத்துள்ள கொண்டைக்கடலையை யும் போட்டு 10 நிமிடங்கள் கிளறவும். அப்பொழுதுதான் மசாலா ஒன்றோடு ஒன்று ஒட்டி, சுவை கூடும்.

*இப்போது  சுவையான வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதம் தயார்.

Coconut Health Benefits And Minerals

.