பட்டாணி உருளைக் கிழங்கு மசாலா / Green Peas Potato Masala

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சின்ன உருளைக்கிழங்கு       -      13

பச்சை பட்டாணி             -      1 கப்

வெங்காயம்                      -      2

வெண்ணைய்                -      1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது        -      1 டீஸ்பூன்

மிளகாய் தூள்              -      1 டீஸ்பூன்

மல்லித் தூள்               -      1 டீஸ்பூன் 

அரைக்க: 

பாதாம்                           -      5

முந்திரி பருப்பு                 -      5

பொட்டுக்கடலை            -      1 டேபிள்ஸ்பூன்

கச கசா                     -      1 டீஸ்பூன்

பட்டை                     -      1 துண்டு

செய்முறை:

*சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

*பாதாம்பருப்புமுந்திரிபருப்பு,கசகசா மூன்றையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும். 

*பட்டையையும் பொட்டுக்கடலையைம் வறுத்து ஊறவைத்த பருப்புகள்,கசகசா எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

*வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணய் சேர்த்து உருகினவுடன் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பட்டாணி,உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். 

*விழுதை உப்புடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள் சேர்க்கவும்.

*எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

Potatoes health benefits and minerals

Green Peas Health Benefits And Minerals

.