பிஞ்சு சோள கூட்டு / Baby Corn Kuttu

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பிஞ்சு சோளம்                     -      8

இஞ்சி பூண்டு விழுது          -      1 ஸ்பூன்

சின்ன வெங்காயம்           -      1 கப் பொடியாக நறுக்கியது

தக்காளி                      -      1 நம்பர்

பச்சை மிளகாய்              -      3 நம்பர்

புளித்தண்ணீர்                 -      2 ஸ்பூன்

தேங்காய் துருவல்            -      1/4 கப்

மிளகாய் தூள்               -      1 ஸ்பூன்

கொத்தமல்லி தழை           -      1/4 கப் பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை               -      1 கொத்து

நல்லெண்ணெய்             -      தேவையான அளவு

உப்பு                         -      தேவையான அளவு

தண்ணீர்                     -      சிறிதளவு

செய்முறை:

*முதலில் பிஞ்சு சோளத்தை தோலை உரித்து நன்கு அலசி 4 பாகமாக நறுக்கிக் கொள்ளவும்.

*தக்காளியை வெந்நீரில் வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

*தேங்காய் துருவலையும் மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுகறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும்வரைவதக்கவும்.

*நன்கு வதக்கியவுடன் நறுக்கிய சோளத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு பச்சை மிளகாய்மிளகாய் பொடி போட்டு வதக்கவும். 

*பின்பு அதனுடன் அரைத்த தக்காளி விழுதுஅரைத்த தேங்காய்உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சுருங்கி வரும் வரை வதக்கவும்.

*நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.

Sweet Corn Health Benefits And Minerals

.