முளைப்பயறு பார்லி புட்டு / Mulaippayaru barley Puttu

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பார்லி குருணை           -      1/2 கப்

கொண்டைக் கடலை  -      1/2 கப்(முளை கட்டியது)

பச்சைப்பயறு              -      1/2 கப்

வெங்காயம்               -       (சிறியது)

பச்சை மிளகாய்          -      2

காய்ந்த மிளகாய்         -       1

மஞ்சள் தூள்               -       1/4 டீஸ்பூன்

சோம்பு                     -       1/4 டீஸ்பூன்

இஞ்சி                     -       1 சிறு துண்டு

பூண்டுப்பல்                -      4

கொத்தமல்லித்தழை           சிறிது

எலுமிச்சை சாறு         -       டீஸ்பூன்

உப்பு+எண்ணெய்         -      தேவைக்கு 

செய்முறை:

*   பார்லியை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணியை வடித்துக்கொள்ளவும்.வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும் 

*   முளைப்பயறுடன் உப்பு+பூண்டுப்பல்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

*  பின் மஞ்சள்தூள்+உப்பு+அரைத்த பயறு சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறவும்

*  அப்போழுது ஊறவைத்த பார்லி+எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பொலபொலவென வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Chick Peas Health Benefits And Minerals

.