அரிசி துவரம்பருப்பு கொழுக்கட்டை / Boiled rice Pigeon Pea Dumpling

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி          -       200 கிராம்

காய்ந்த மிளகாய்            -          3

துவரம் பருப்பு                    -       50 கிராம்

சீரகம்                                   -      1 டீஸ்பூன்

துருவிய தேங்காய்        -       1 கப்

செய்முறை:

*புழுங்கல் அரிசியையும், துவரம் பருப்பையும் ஊறவைக்கவும். 

*இரண்டையும் வற்றல் மிளகாயோடு சேர்த்து நன்றாக, ரவை பதத்தில் அரைக்கவும். 

*இதோடு சீரகமும், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ளவும். 

 *எண்ணெய் தடவிய இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

*இப்போது  சுவையான  துவரம்பருப்பு கொழுக்கட்டை   ரெடி!!!!!

Coconut Health Benefits And Minerals

.