துவரம் பருப்பு பச்சடி / TURDAL PACHADI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள

துவரம் பருப்பு                   -               50 கிராம்

காய்ந்த மிளகாய்             -                  2

புளி                                  -                  2 சுளை

பூண்டு                               -                  4 பல்

உப்பு                                 -                 தேவையான அளவு

கறிவேப்பிலை                 -                  1 கொத்து

நல்லெண்ணெய்              -                    2

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் மற்றும் தனியாவை போட்டு வறுக்கவும்.

அதனை ஒரு த‌ட்டி‌ல் எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ண்டு பிறகு துவரம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறு‌‌க்கவு‌ம். மிக்ஸியில் மிளகாய், தனியாவை முதலில் அரைக்கவும். பிறகு பருப்பு மற்றும் புளி சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.

பிறகு ஒரு கப் தண்ணீர், உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை பேட்டு தாளிக்க வேண்டும்.

அரைத்த கலவையை வாணலில் ஊற்றி கிளறி எடுக்க வேண்டும். இப்போது துவரம் பருப்பு பச்சடி ரெடி!!!

இப் பச்சடியை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் சத்தானதும் கூட!!

Curry Leaves Health Benefits and Minerals

.