காய்கறி மக்காச்சோள ரவை கிச்சடி / Vegetable Corn Semolina Khichdi

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

மக்காச்சோள ரவை              -       1 கப்,

பொடியாக நறுக்கிய காய்கள்    -     ஒரு கப் (பட்டாணிகாரட்உருளைக்கிழங்குபீன்ஸ்),

வெங்காயம்                   -      கால் கப் (பொடியாக நறுக்கியது)

சிறிய தக்காளி                 -      ஒன்று (பொடியாக நறுக்கியது)

இஞ்சி                         -      ஒரு சிறிய துண்டு,

பச்சை மிளகாய்                -       5,

எலுமிச்சை சாறு               -       ஒரு டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை 

கொத்தமல்லி தழை            -      சிறிது,

மஞ்சள் தூள்                  -      கால் சிட்டிகை,

தண்ணீர்                       -      இரண்டரை கப்,

உப்பு                          -      தேவையான அளவு.

தாளிப்பதற்கு...

எண்ணெய்                    -      2 டேபிள்ஸ்பூன்,

கடுகு                         -      அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு              -      அரை டேபிள்ஸ்பூன்,

கடலைப்பருப்பு                -      அரை டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை                 -      சிறிது.

செய்முறை:

*அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றிசூடானதும் கடுகுஉ.பருப்புக.பருப்புகறிவேப்பிலை தாளிக்கவும்.

*வெங்காயம்இஞ்சிபச்சைமிளகாய்  சேர்த்து வதக்கிகாய்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*மஞ்சள் தூள்தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும். 

*தண்ணீர் கொதி வந்தவுடன் எலுமிச்சைப்பழ ஜூஸ்உப்பு சேர்த்து தணலைக் குறைத்து வைத்து ரவையை தூவியது போல் கொட்டிக் கிளறவும்.  கடாயை மூடி 15 நிமிடங்கள் மிகக் குறைந்த தணலில் வேகவிடவும். 

*இடையில் ஒரு முறை கிளறிவிடவும். கொத்தமல்லி தழை தூவி தேங்காய் சட்னிபீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

*மக்காச்சோள ரவை வேக  சிறிது நேரம் எடுக்கும்.

*வதக்கும் போதே மஞ்சள் தூள்  சேர்ப்பதால் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும். எலுமிச்சைப்பழ ஜூஸை கொதித்தவுடன் விடவேண்டும். !!!!!!

Onion Health Benefits And Minerals

.