கோதுமை கஞ்சி / Wheat Porridge

Posted in தானிய வகை ரெசிபிகள்

.தேவையான பொருட்கள்

கோதுமை மாவு      -      1 கப்,

வெல்லம்            -      100 கிராம்,

உப்பு                -      1 சிட்டிகை,

நெய்                -      1 டீஸ்பூன். 

செய்முறை:

*வெல்லத்தில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டுவடிகட்டவும்.

*கோதுமை மாவில் தண்ணீர் விட்டுதோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். 

*ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறிது சிறிதாக விட்டுகட்டி  தட்டாமல்கை விடாமல் கிளறவும்.

*விரலை தண்ணீரில் நனைத்துவிட்டுகலவையில் வைத்துப் பார்த்தால்ஒட்டாமல் வந்தால் அது சரியான பதம்.  அப்போது அதில் வெல்லக் கரைசலையும் உப்பையும் சேர்க்கவும்.

*நன்கு கலந்துமேலே நெய் விட்டுப் பரிமாறவும்

.