சுரைக்காய் கடலைப்பருப்பு தால் / Bottle Gourd Bengal gram Dhall

Posted in தானிய வகை ரெசிபிகள்

 

தேவையான பொருட்கள்:

ஊற வைத்த கடலைப் பருப்பு          -      2 கப்

சிவப்பு அல்லது பச்சை மிளகாய்        -      4

பெருங்காயம்                        -      1 சிட்டிகை

உப்பு                                 -      தேவைக்கேற்ப

மிளகாய் தூள்                       -      2 டீஸ்பூன்

நறுக்கிய தக்காளி                    -      2 கப்

நறுக்கிய சுரைக்காய்                  -      1 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி           -      1 டேபிள்ஸ்பூன்

நெய் அல்லது எண்ணெய்            -      கால் கப்

பூண்டு                              -      6 பல்

புளிக்கரைசல்                        -      கால் கப்

சீரகம்                               -      1 டேபிள்ஸ்பூன்

கசூரி மேத்தி                         -      சிறிது

செய்முறை

*நெய் அல்லது எண்ணெயைச் சுட வைக்கவும். பெருங்காயம்இஞ்சிபூண்டு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு சீரகம்காய்ந்த மிளகாய்மிளகாய் தூள் சேர்க்கவும். 

*நன்கு வதங்கியதும்தக்காளிசுரைக்காய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த கடலைப் பருப்பை முக்கால் பதம் வேகவைத்துவதங்கிய சுரைக்காய்மசாலாவுடன் சேர்த்துஉப்புதண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக வேக வைக்கவும். 

*நன்றாகக் கொதி வந்துகுழைய வெந்ததும்கசூரி மேத்தி சேர்த்து இறக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

 Tomato Health Benefits And Minerals

.