கொண்டை கடலை சாட் / CHICKPEAS CHAAT

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை    –        1/2 கப்

வெங்காயம்            –        1

தக்காளி               –        1

வெள்ளரிக்காய்         –        1/4 கப்

மல்லித் தளை         –        சிறிது

பச்சை மிளகாய்        –        2 (நறுக்கியது)

புளி                   –        1 தேக்கரண்டி

பேரீட்சை              –        1/2 தேக்கரண்டி

சுக்கு தூள்                    தேவையான அளவு

நல்ல மிளகு தூள்      –        தேவையான அளவு

கார பூந்தி              –        துவையான அளவு

செய்முறை

கொண்டைக் கடலையை நன்கு கழுவி இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கவும்.

பின்பு அதனை வடிகட்டி பிரஷர் குக்கரில் போடவும். அதனுடன்பேக்கிங் சோடா சேர்த்து1 விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

விரும்பினால் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கலாம். கடலை வெந்ததும் மீதமுள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும்.

பின்பு சாட் மசாலா, உப்பு, நல்ல மிளகு தூள், மங்காய் தூள், சுக்குதூள், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தளை சேர்க்கவும். புளி விழுதை தேனுடனோ அல்லது பேரீட்சை சாறுடனோ கலந்து சேர்க்கவும்.அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். சுவையை சரிபார்த்து தேவையானவற்றை சேர்த்துக் கொள்ளவும். பின்பு கார பூந்தி சேர்க்கவும்.

கொண்டை கடலை சாட் ரெடி!!!!!!

.