ராகி நிலக்கடலை லட்டு / RAGI PEANUT LADDU / FINGER MILLET LADDU

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ராகி மாவு                –        1 கப்

எள்                      –        1/2 கப்

நிலக்கடலை             –        1/4 கப்

தேங்காய்                –        1/4 கப்

ஏலக்காய்                –        4

சர்க்கரை / வெல்லம்    –        150 கிராம் (கருப்பட்டியும் பயன் படுத்தலாம்)

நெய்                    –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

ராகி மாவை வறுத்துக் கொள்ளவும். நிலக்கடலையையும் வறுத்து தோலினை நீக்கி விடவும். தேங்காய் தூள் மற்றும் எள்ளையும் வறுத்து தனியே வைக்கவும். வெல்லத்தையும் துருவி தனியே வைக்கவும். 

பின்பு நிலக்கடலை, எள், தேங்காய் மற்றும் ஏலக்காயை தனித்தனியாக நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு மீண்டும் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின் வெல்லத்தை நீா் சேர்த்து சூடாக்கவும்.

அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்.

வெல்லக் கரைசல் சரியான பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.

பின்பு அதனுடன் அரைத்த நிலக்கடலை, மாவுக்கலவையை சேர்க்கவும்

நன்கு கலக்கி பின்பு சிறிய லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்

ராகி நிலக்கடலை லட்டு ரெடி!!!!!!!!!!!

.