ஜவ்வரிசி வடகம் / SABUDANA VADAM

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி               –        1 கப்

மோர்                  –        1/2 கப்

நீர்                     –        2 கப்

பச்சை மிளகாய்        –        4

எலுமிச்சை            –        1/2

ஃபுட் கலர்              –        2 சொட்டு

பெருங்காயம்          –        ஒரு சிட்டிகை

உப்பு                   –        1 தேக்கரண்டி

செய்முறை

ஜவ்வரிசியை நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து கொதிக்கத் தெடங்கியதும் ஊற வைத்த ஜவ்வரிசியை நீரில் போடவும்.

ஜவ்வரிசி பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நன்கு கிளறவும்.

ஜவ்வரிசி கஞ்சி நிலைக்கு வந்தவுடன் தீயை அணைத்து விட்டு ஆற வைக்கவும்.

அதே நேரம் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அரைத்த விழுது மற்றும் மோரை ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.

 

நன்கு கலக்கி விட்டு எலுமிச்சை சேர்க்கவும்.

அதனை 3 பகுதிகளை பிரித்து விரும்பிய ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு வெயிலில் ஒரு பிளாஸ்டிக் தாளை போட்டு அதில் ஜவ்வரிசி கலவையை ஒரு கரண்டியால் எடுத்து வட்ட வடிவமாக அதில் வைக்கவும்.

ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கவும். பின்பு அதனை திருப்பிப் போட்டு காய வைக்கவும்.

பின்பு அதனை எடுத்து காற்று புகாத பாட்டிலில் வைத்து தேவைக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

 

தேவைப்படும் போது அதனை பொரித்து பயன் படுத்தலாம்.

.