ஜவ்வரிசி கிச்சடி / SABUDANA KHICHADI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி                –        1 கப் 

உருளைக்கிழங்கு       –        2

நிலக்கடலை            –        1/2 கப்

கறி வேப்பிலை         –        10

இஞ்சி                  –        1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்        –        1

ஜீரகம்                  –        1 தேக்கரண்டி

தேங்காய்               –        1/4 கப்

சர்க்கரை               –        1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு       –        1 தேக்கரண்டி

எண்ணெய்             –        2 மேஜைக்கரண்டி

உப்பு                   –        தேவையான அளவு

செய்முறை

ஜவ்வரிசியை இரண்டு மூன்று முறை நீரால் கழுவிக் கொள்ளவும். பின்பு அதனை 3 மிணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

நிலக்கடலையை வறுத்துக் கொள்ளவும். விரும்பினால் தோலுரித்துக் கொள்ளவும்.

நிலக்கடலையை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஜவ்வரிசியை வடிகட்டி அதனுடன் அரைத்த நிலக்கடலை, உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தை தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து இரை நிமிடம் வதக்கவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு ஜவ்வரிசி சேர்த்து நன்கு கிளறவும்.

ஜவ்வரிசி கிச்சடி ரெடி!!!!!!

.