பின்டோ பீன்ஸ்(pinto beans) கறி / PINTO BEANS CURRY

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பின்டோபீன்ஸ்(pinto beans)          -      1 கப்

வெங்காயம்                            -      1

தக்காளி                                  -      2

இஞ்சி பூண்டு விழுது            -      1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்                -      2

மஞ்சள் தூள்                                 -      ¼  தேக்கரண்டி

மிளகாய் தூள்                  -      ½ தேக்கரண்டி

கரம் மசால தூள்                  -      ¼  தேக்கரண்டி

பெருங்காயம்                -      சிறிது

ஜீரகம்                       -      ½  தேக்கரண்டி

காய்ந்த வெந்தயஇலை       -      1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்         -       2 தேக்கரண்டி

வெண்ணெய்                 -      1 தேக்கரண்டி

தண்ணீர்                     -      தேவையான அளவு

உப்பு                               -      தேவையான அளவு

செய்முறை

பின்டோபீன்ஸ்(pinto beans) யை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

வேகவைக்கும் முன்  பீன்ஸ்யை நன்றாக கழுவ வேண்டும்

பின்பு குக்கரில் பின்டோபீன்ஸ்(pinto beans) தண்ணீர் சேர்க்க வேண்டும்

15 -20 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்

தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறியதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்

குக்கரை  திறக்கவும்  இப்பெழுது பின்டோபீன்ஸ்(pinto beans) நன்றாக வெந்திருக்கும்

பானில் சிறிது எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்க வேண்டும்

எண்ணெய் மற்றும் வெண்ணெய் சூடானதும் ஜீரகம் சேர்க்க வேண்டும்

வெங்காயம் சேர்க்க வேண்டும்

வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்

சிறிது பொன்நிறம் வரை நன்கு வதக்க வேண்டும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்

வதக்க வேண்டும்

வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும்.தக்காளி சேர்க்க வேண்டும்

தக்காளியை 2 – 3 நிமிடங்கள் நன்கு  வதக்க வேண்டும்

மஞ்சள்பொடி  வத்தல் மிளகாய் பொடி கரம் மசால தூள்  மற்றும் பெருங்காயம் சேர்க்க வேண்டும்

நன்கு  வதக்க வேண்டும்.

மசால நன்கு சேரும்வரை நனகு வதக்க வேண்டும்

வேகவைத்த பின்டோபீன்ஸ்(pinto beans) சேர்க்க வேண்டும்

1 நிமிடம் வேகவைக்க வேண்டும்

 

தண்ணீர் சேர்க்க வேண்டும்

உப்பு சேர்க்க வேண்டும்

நன்றாக கலக்கவும்

குழம்பு சிறிது கெட்டியாகும் வரை மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்

குழம்பு சிறிது கெட்டியானதும் வெந்தயஇலை சேர்த்து இறக்கவும்

இப்போது   பின்டோபீன்ஸ்(pinto beans)   கறி ரெடி!!!!! 

.