திணை உப்புமா / FOXTAIL MILLET UPMA

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

திணை                       –       1/2 கப்

நீர்                           –       1 கப்

எண்ணெய்/நெய்             –       11/2 தேக்கரண்டி

கடுகு                        –       1/4 தேக்கரண்டி

ஜீரகம்                       –       1/2 தேக்கரண்டி

பெருங்காயம்                –       ஒரு சிட்டிகை

உழுத்தம் பருப்பு             –       1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு             –       1 தேக்கரண்டி

இஞ்சி                       –       விரும்பினால்

கறி வேப்பிலை             –       1 கொத்து

உப்பு                        –       தேவையான அளவு

பச்சை மிளகாய்             –       1

காய்கள் – வெங்காயம்காரட்பட்டாணிகுடைமிளகாய்

செய்முறை

திணையை நன்கு கழுவி நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு, ஜீரகம், கடலைப் பருப்பு, உழுத்தம் பருப்பு சேர்க்கவும்.

 

கடலைப் பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பு பொன்னிறமானதும் நறுக்கிய காய்கள் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்.3 நிமிடங்கள் வதக்கவும்.

நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி உப்பை சரிபார்த்துக் கொள்ளவும்.

நீர் கொதிக்க தொடங்கியதும் திணை சேர்க்கவும்.

மிதமான தீயில் வேக வைக்கவும். திணை வெந்ததும் நீர் முழுவதும் ஆவியகும் வரை நன்கு கிளறவும்.

திணை உப்புமா ரெடி!!!!!!

.