பாசிப் பருப்பு கிச்சடி / MOONG DAL KICHADI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

நெய்                 –        1 மேகை்கரண்டி

ஜீரகம்               –        1/2 தேக்கரண்டி

பே லீஃப்             –        1

இஞ்சி                –        1 தேக்கரண்டி (துருவியது)

வெங்காயம்          –        சிறிது

தக்காளி              –        1/2 கப்

மிளகாய் தூள்        –        1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்         –        சிறிது

பச்சை மிளகாய்      –        1

உப்பு                 –        தேவைாயான அளவு

அரிசி                –        3/4 கப்

பாசிப் பருப்பு         –        3/4 கப்

நீர்                   -       21/2 கப்

செய்முறை

அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் பின்பு அதனை வடிகட்டி தனியே வைக்கவும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம் மற்றும் பே லீஃப் சேர்க்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வெங்காயம் சேர்க்கவும் பச்சை வாசம் போகும் வரை 2 நிமிடங்கள் வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும், மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்.

மிளகாய் துள், கரம் மசாலா தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

தக்காளி மற்றும் மசாலா தூள்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு சேர்க்கவும்.

3 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

நீா் சேர்த்து நன்கு கலக்கவும். உப்பை சரிபார்த்து தேவைப் பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

பின்பு சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

 

பாசிப் பருப்பு கிச்சடி ரெடி!!!!!!

.