முளைகட்டிய பாசிப் பயறு / MOONG SPROUTS

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு            –        1/2 கப்

சூடான நீர்            –        தேவையான அளவு

செய்முறை

பாசிப் பயறை நீரால் நன்கு கழுவிக் கொள்ளவும். இறுதியாக சூடான நீரில் கழுவிக் கொள்ளவும்.

கொதிக்க வைத்து ஆறிய நீரில் பாசிப் பயறை ஊற வைக்கவும். 8-10 மணி நேரம் ஊற வைக்கவும்

பின்பு அதனை வடிகட்டி எடுத்து சுத்தமான காட்டன் துணியில் வைத்து இறுகக் கட்டி வைக்கவும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டால் மூடி வைக்கவும்.

அதனை ஒரு சூடான இருட்டான இடத்தில் வைக்கவும்.

மறுநாள் அதனை எடுக்கும் போது அதில் முளை வந்திருப்பதை காணலாம்.

ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

.