பாசிப்பயறு சூப் / MOONG DAL SOUP

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு            –        1/4 கப்

இஞ்சி                  –        1/4 தேக்கரண்டி

நெய்                   –        1 தேக்கரண்டி

ஜீரகம்                  –        1/2 தேக்கரண்டி

நீர்                     -       2 கப்

காய்கறிகள்

காரட்சுரைக்காய்பூசணிக்காய்,

உப்பு                   –        தேவையான அளவு

மசாலா தூள்கள்

நல்ல மிளகு தூள்      –        தேவையான அளவு

சுக்கு                  –        ஒரு சிட்டிகை

ஜீரகம்                 –        1/2 தேக்கரண்டி

வெந்தயக் கீரை        –        1/2

மாங்காய் தூள்         –        தேவையான அளவு

ஓமம்                 –        ஒரு சிட்டிகை

செய்முறை

பாசிப்பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் நெய் விட்டு சூடானதும் ஜீரகம் தாளிக்கவும்.

பின்பு துருவிய இஞ்சி சேர்க்கவும்.

பாசிப் பருப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து 2-3 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

பின்பு நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்.

நீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்

பிரஷர் முழுவதும் வெளியேறியதும் மசாலா தூள்களை போட்டு கொதிக்க வைக்கவும்.

பின்பு காய்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.

பாசிப்பயறு சூப் ரெடி!!!!!!!!!!!!

.