காரமணி கிரேவி / COW PEAS (BLACK EYED PEA) GRAVY

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையானபொருட்கள்

நெய்                      –        1.5 தேக்கரண்டி

ஜீரகம்                    –        1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது      –        1 தேக்கரண்டி

வெங்காயம்               –        3/4 கப்

தக்காளி                  –        3/4 கப்

காரமணி பயறு           –        1/4 கப்

நீர்                       –        1 கப்+1/4 கப்

மிளகாய் தூள்            –        1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்             –        தேவையான அளவு

மல்லி தூள்             –        1 தேக்கரண்டி

ஜீரகத் தூள்               –        1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்        –        3/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்            –        3/4 தேக்கரண்டி

இஞ்சி                   –        சிறிது

பச்சை மிளகாய்          –        1

மல்லி தளை           –        1 கைப்பிடியளவு

உப்பு                    –        தேவையான அளவு

செய்முறை

காரமணியை நீரினால் நன்கு கழுவி 10 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஜீரகம் சேர்த்து தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும். பின்பு பெருங்காயம் சேர்க்கவும்.

வெங்காய விழுது சேர்க்கவும்.

அது பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும்.

பின்பு தக்காளி விழுது சேர்க்கவும்.

தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஜீரகத் தூள் சேர்க்கவும்.

மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்.

பின்பு ஊற வைத்த காரமணி சேர்க்கவும்.

சிறிது நீர் சேர்க்கவும். 

இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

பின்பு மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்பு 15 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

பிரஷர் முழுவதும் வெளியேறியதும் அதன் மூடியை திறக்கவும்

காரமணி நன்கு வெந்துள்ளது

 

காரமணி கிரேவி ரெடி!!!!!!!!!!!

.