முளைக்கட்டிய பயறு சூப் / BEAN SPROUTS SOUP

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முளைக் கட்டிய பயறு         –        1/2 கப்

காய்கறிகள்                   –        1 கப்

காரட்

குடைமிளகாய்

பீன்ஸ்

சுரைக்காய்

பூசணிக்காய்

மசாலா தூள்கள்

நல்ல மிளகு தூள்            –        தேவையான அளவு

ஜீரகத் தூள்                   –        தேவையான அளவு

மஞ்சள் தூள்                  –        ஒரு சிட்டிகை

மீதமுள்ள பொருட்கள்

உப்பு                         –        தேவையான அளவு

நெய்                         –        1 தேக்கரண்டி

பூண்டு                       –        1 தேக்கரண்டி

மல்லி தளை                –        தேவையான அளவு

செய்முறை

பிரஷர் குக்கரில் 3 கப் நீர் எடுத்து அதனை கொதிக்க வைக்கவும்.

அனைத்து காய்களையும் நீருடன் சேர்க்கவும். முளைகட்டிய பயறையும் அதனுடன் சேர்க்கவும்.

குக்கரை மூடி அவற்றை வேக வைக்கவும்.

பின்பு அவற்றை ஆற வைத்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு பானில் நெய் விட்டு சூடாக்கவும். பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்

அதன் பின் அதனுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் நல்ல மிளகு தூள் மற்றும் ஜீரகத் தூள் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்

.