English Category

மக்காசோள சுண்டல் / SWEETCORN SUNDAL

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

நெய்                   –        1 மேஜைக்கரண்டி

பெருங்காயம்           –        ஒரு சிட்டிகை

கடுகு                  –        1/4 தேக்கரண்டி

ஜீரகம்                 –        1/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு        –        1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்        –        2

இஞ்சி                 –        1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை        –        1 கொத்து

மக்காச் சோளம்        –        11/2 கப்

உப்பு                   –        தேவையான  அளவு

தேங்காய் துருவல்     –        2-3 மேஜைக்கரண்டி

செய்முறை

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, ஜீரகம், சேர்க்கவும். பின்பு உழுத்தம் பருப்பு சேர்க்கவும்.

இஞ்சி, கறி வேப்பிலை மற்றும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்.

உழுத்தம் பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம் சேர்க்கவும்.

பின்பு மக்காச் சோளம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு கிளறவும்.

பின்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.

 

மக்காசோள சுண்டல் ரெடி!!!!!!!!

Tamil Category

.