முளைக்கட்டிய பாசிப்பயறு சப்ஜி / MUNG BEAN SPROUTS SABZI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய பாசிப்பயறு   –        160 கிராம்

உருளைக் கிழங்கு          –        2

தக்காளி                    –        1

இஞ்சி                      –        1/2 இஞ்ச் துண்டு

பூண்டு                      –        6-8

பச்சை மிளகாய்             –        1

கரம் மசாலா                –        1/2 தேக்கரண்டி

மல்லி தூள்                 –        1/2 தேக்கரண்டி

ஜீரகத் தூள்                 –        1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்               -       1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                -       1/4 தேக்கரண்டி

பெருங்காயம்                –        தேவைப்பட்டால்

எண்ணெய்                  –        1.5 மேஜைக்கரண்டி

நீர்                          –        தேவையான அளவு

மல்லி தளை                –        1-2 தேக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்து அவற்றை தயார் நிலையில் வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்

பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும்

வெங்காயம் வதங்கும் போது முளைக்கட்டிய பயறை கழுவிக் கொள்ளவும்

வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்

பின்பு மல்லித் தூள், மிளகாய் தூள், ஜீரகத் தூள், மஞ்சள் தூள், மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்

பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்.

உருளைக் கிழங்கு சேர்க்கவும்

பின்பு முளைக்கட்டிய பயறு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

பின்பு நீர் சேர்த்து நன்கு கிளறவும்

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

மூடி வைத்து மீதமான தீயில் வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சுர்த்துக் கொள்ளவும்

அனைத்தும் வெந்ததும் மல்லித் தளை சேர்க்கவும்

நன்கு கிளறவும். முளைக்கட்டிய பாசிப்பயறு சப்ஜி ரெடி!!!!!!!!!!

.