மக்காசோள ஃப்ரை / SWEET CORN FRY

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

இளம் சோள மாவு          –        10-12

குடைமிளகாய்              –        1

வெங்காயம்                 –        1

பச்சை மிளகாய்             –        2

மஞ்சள் தூள்                –        1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்              -       1/2 தேக்கரண்டி

ஜீரகத் தூள்                 –        1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்          -       1/4 - 1/2  தேக்கரண்டி

கரம் மசாலா தூள்           -       1/4 தேக்கரண்டி

எண்ணெய்                  –        2 மேஜைக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

செய்முறை

மக்காச் சோளத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

குறைந்த தீயில் வைத்து நன்கு கிளறவும்

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு பச்சை மிளகாய் சேர்க்கவும்

நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கவும்

நறுக்கிய மக்கா சோளம் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகத் தூள், நல்ல மிளகு தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்.

 

மூடி வைக்காமல் 3 - 4 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

மக்காச் சோளம் பொன்னிறமாகும் வரை கிளறவும்

பின்பு தீயை அணைத்து விட்டு மல்லித் தளை சேர்த்து நன்கு கிளறவும்.

 

மக்காசோள ஃப்ரை ரெடி!!!!!!!

.