பருப்பு உருண்டைக் குழம்பு / DAL BALLS CURRY

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பருப்பு உருண்டைக்கு

பருப்பு                     –        1 கப்

வத்தல்மிளகாய்         –        1

தேங்காய் எண்ணெய்     –        1 தேக்கரண்டி

உப்பு                      –        தேவையான அளவு

குழம்புக்கு  

தேங்காய் எண்ணெய்      –        1 தேக்கரண்டி

கடுகு                     –        1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு          –        1 தேக்கரண்டி

பெருங்காயம்             –        ஒரு சிட்டிகை

கறி வேப்பிலை           –        ஒரு கொத்து

மிளகாய் தூள்            –        1 தேக்கரண்டி

மல்லி தூள்               –        1.5 தேக்கரண்டி

மஞ்சள் தூள்              –        1 தேக்கரண்டி

புளி                       –        2 மேஜைக்கரண்டி

நீர்                        –        2 கப்

உப்பு                      –        தேவையான அளவு

செய்முறை

துவரம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அதனை வடிகட்டி மிக்சியில் போடவும்.

வத்தல் மிளகாய் சேர்க்கவும்

கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு அரைத்த விழுதை சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

2 - 3 நிமிங்கள் வதக்கவும்

பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

பின்பு பாத்திரத்தில் வைக்கவும்.

அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

தனியே வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்.

பெருங்காயம் சேர்க்கவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

30 விநாடிகள் வதக்கவும்

மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

சிறிது நேரம் வதக்கவும்

புளித் தண்ணீர் சேர்க்கவும்

 

நீர் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

கொதிக்க வைக்கவும்

பின்பு பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக குழம்பில் போடவும்

2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் மற்றும் 8 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்

பருப்பு உருண்டைக் குழம்பு ரெடி!!!!

.