பச்சரிசி பிசிபேளா பாத் / Rice Picipola Path

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                     -      2 கப்

பெரிய வெங்காயம்          -      1 கப்

மஞ்சள் தூள்               -      சிறிது

எண்ணெய்                  -      3 டேபிள்ஸ்பூன்

உப்பு                       -      சிறிது

புளி                        -      1 சிறு உருண்டை

துவரம் பருப்பு              -      அரை கப்

தக்காளி                     -      4

கடுகு                      -      1 டீஸ்பூன்

உளுந்து                    -      1 டீஸ்பூன்

கறிவேப்பிலை              -      சிறிது

நெய்                       -      1 டீஸ்பூன்

வறுத்துஅரைக்க: 

காய்ந்த மிளகாய்            -      6 முதல் 8

மல்லித் தூள்                -      1 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு              -      1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல்          -      1 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்                  -      1 டீஸ்பூன்

பெருங்காயம்               -      சிறிது

சீரகம்                      -      1 டீஸ்பூன்

செய்முறை

அரிசியைக் கழுவிதுவரம் பருப்புடன் சேர்த்துசிறிது உப்புமஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம்தக்காளியை நறுக்கவும். புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்கடுகுஉளுந்து தாளித்துவெங்காயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கிஅதில் தக்காளிசிறிது உப்பு சேர்த்துதக்காளி கரையும் வரை வதக்கவும். 

அதில் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்துஅரைத்து வைத்துள்ள பொடிகறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிட்டுஇறக்கிசாதத்துடன் சேர்த்துநெய்யும் விட்டு நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு பிடி பச்சை பட்டாணியை தக்காளியுடன் சேர்த்து வதக்கிச் செய்யலாம்.

.