பாசிப் பருப்பு திணை கிச்சடி / MOONG DAL & FOXTAIL MILLET KICHADI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

வெங்காயம்           –        1

பச்சை மிளகாய்         –        1-2

இஞ்சி,                –        1 இஞ்ச் துண்டு

திணை                –        ½ கப்

பாசிப் பருப்பு          –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்           –        ஒரு சிட்டிகை

நெய்                   –        1 தேக்கரண்டி

உப்பு                     –        தேவையான அளவு

காய்கறிகள்

காரட்                    –        1

பீன்ஸ்                 –        3-4

உருளைக்கிழங்கு       –        1 அல்லது ½

தக்காளி               –        1/2

முருங்கை இலை      –        கைப்பிடியளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்   –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                  –        ½  தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு         –        ½ தேக்கரண்டி

ஜீரகம்                  –        ½ தேக்கரண்டி

நல்ல மிளகு           –        2-3

காய்ந்த மிளகாய்        –        1

பெருங்காயம்          –        ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை ,         –        சிறிது

செய்முறை

அனைத்து காய்கறிகளையும் நடுத்தர அளவுள்ள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

திணை மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி 1½ கப் சூடான நீரில் 2-2 ½ மணி நேரம் ஊற வைக்கவும்

ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளிக்கவும். பின்பு உழுத்தம் பருப்பு, ஜீரகம், வததல் மிளகாய், பெருங்காயம், நல்ல மிளகு மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் தேர்த்து வெங்காயம் பொன்னிறமகும் வரை வதக்கவும்

அனைத்து காய்கறிகள், கீரை, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்பு நீரில் ஊற வைத்த திணை மற்றும் பருப்பை ஊற வைத்த நீருடன் சேர்க்கவும். உப்பை சரி பார்த்துக் கொள்ளவும். 

அதன் பின் பின்பு குக்கரை மூடி வைத்து 2 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்பு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து பின் தீயை அணைத்து விடவும். 

 

குக்கரிலுள்ள பிரஷர் முழுவதும் வெளியேறியதும் அதனை திறந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலக்கவும்

பருப்பு திணை கிச்சடி ரெடி!!!!!!!!!

.