உழுந்து சாமை கஞ்சி / URAD DAL & LITTLE MILLET KANJI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சாமை அரிசி        –        1 கப்

உழுத்தம் பருப்பு     –        1 கப் (தோலுடன்)

பூண்டு              –        10 பற்கள்

வெந்தயம்           –        ½ தேக்கரண்டி

உப்பு                –        தேவையான அளவு

காய்ச்சிய பால்      -       ½ லிட்டர்

நீா்                  –        5 கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

உழுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் சாமை சேர்க்கவும்.

அவற்றை நன்கு சுத்தம் செய்யவும்

பின்பு அவற்றை வடிகட்டி பிரஷர் குக்கரில் போடவும். அதனுடன் நீர் சேர்க்கவும்.

பூண்டு சேர்க்கவும்

வெந்தயம் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

அனைத்தையும் நன்கு கலக்கி மூடி வைத்து வேக வைக்கவும்

உழுந்து மற்றும் சாமை வெந்ததும் அதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

உழுந்து சாமை கஞ்சி ரெடி!!!!!!!!

.