மக்காசோள புலாவ் / BABYCORN PULAV

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி             –        1 கப்

மக்கா சோளம்              –        2 கப் (நீளமாக வெட்டியது)

நெய்                        –        1 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்       –        1 மேஜைக்கரண்டி

சோம்பு                      –        1 தேக்கரண்டி

ஜீரகம்                      –        1 தேக்கரண்டி

பட்டை                      –        1 செமீ துண்டு

பே லீஃப்                     –        1

வெங்காயம்                –        1

பச்சை மிளகாய்             –        3 - 4

 இஞ்சி பூண்டு விழுது        –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்               –        1 தேக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

மல்லித்தளை                –        ஒரு கைப்பிடியளவு

பால்                        –        1 கப்

நீர்                         –        ½ கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடாக்கவும்

அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

நன்கு கிளறவும்

நறுக்கிய மக்கா சோளம் சோ்க்கவும்

நன்கு கிளறவும்

மஞ்சள் தூள் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

சிறிது நேரம் நன்கு கிளறவும்

பின்பு அதனுடன் பால் சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

பாஸ்மதி அரிசி சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

மல்லித்தளை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்

மக்காசோள புலாவ் ரெடி!!!!!!!!

.