பச்சை பட்டாணி சோயா பன்னீர் குழம்பு / GREEN PEAS SOYA PANEER CURRY

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சோயா பன்னீர் (Tofu)        –        200 கிராம்

பச்சை பட்டாணி              –        2 கப்

தக்காளி                             –        4

எண்ணெய்                    –        1 தேக்கரண்டி

சீரகம்                         –        1 தேக்கரண்டி

பட்டை                        –        1 இன்ஞ் துண்டு

பே லீஃப்                             –        1

இஞ்சி பூண்டு விழுது          –        1 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                –        2 தேக்கரண்டி

மல்லித் தூள்                  –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                  –        1 தேக்கரண்டி

சீரகத் தூள்                    –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்             –        2 தேக்கரண்டி

உப்பு                          –        தேவையான அளவு

சர்க்கரை                       –        தேவைக்கு

மல்லித் தளை                 –        ஒரு கைப்பிடியளவு

செய்முறை

பச்சை பட்டாணியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்

தக்காளியை லேசாக நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பிரஷர் குக்கரை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து மசாலாக்களையும் அதில் போடவும்

பின்பு அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்

அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

அனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும்

அதிலுள்ள எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும்

பின்னர் பச்சை பட்டாணி சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

சிறிது சர்க்கரை சேர்க்கவும்

சோயா பன்னீா் சேர்க்கவும் (பன்னீரும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

நன்கு கலக்கவும்

பின்பு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அதனை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். பின்பு தீயை அணைத்து விடவும்.

கரம் மசாலா தூள் சேர்க்கவும்

மல்லித் தளை சேர்க்கவும்

பச்சை பட்டாணி சோயா பன்னீர் குழம்பு ரெடி!!!!!!!!!

Green Peas Health Benefits And Minerals

Tofu Health Benefits And Minerals

.