பேபி கார்ன் 65 / BABY CORN 65

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

இளம்சோளகதிர்            –        7 - 8

உப்பு                        –        தேவையான அளவு

எண்ணெய்                 –        பொரிக்க

நீர்                          –        தேவையான அளவு

மசாலாவுக்கு

இஞ்சி பூண்டு விழுது        –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்               –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்           –        1 தேக்கரண்டி

உப்பு                        –        தேவையான அளவு

அரிசி மாவு                 –        1 மேஜைக்கரண்டி

மைதா மாவு                –        1 மேஜைக்கரண்டி

சோள மாவு                 –        1 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு            –        1 தேக்கரண்டி

செய்முறை

மக்கா சோளத்தை எடுத்துக் கொள்ளவும்

சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

ஒரு சாஸ் பானில் அவற்றை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் நீர் மற்றும் உப்பு சேர்க்கவும் 

சிறிது நேரம் வேக வைக்கவும்

பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

வேக வைத்த மக்காச் சோளத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பின்பு அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

மைதா மாவு சேர்க்கவும்

பின்பு சோள மாவு சேர்க்கவும்

அரிசி மாவு சேர்க்கவும்

சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அவற்றை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

அவற்றை எடுத்து பேப்பர் டவ்வலில் சிறிது நேரம் வைக்கவும்

அதிலுள்ள எண்ணெய் வெளியேறியதும் அதன் மீது சிறிது சாட் மசாலாவை தூவி பரிமாறவும்

.