பச்சை பயறு காரட் ரெசிபி / MUNG BEAN & CARROT RECIPE

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பச்சை பயறு            –        1 கப்

நீர்                      –        2.5 கப்

உப்பு                    –        தேவையான அளவு

எண்ணெய்              –        1  தேக்கரண்டி

கடுகு                   –        1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு         –        1 தேக்கரண்டி

பெருங்காயம்            –        ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை          –        1 கொத்து

வெங்காயம்             –        1 (நடுத்தர அளவு)

பச்சை மிளகாய்          –        1

காரட்                   –        1

மல்லித் தளை          –        ஒரு கைப்பிடியளவு

எலுமிச்சை சாறு        –        தேவைக்கு

செய்முறை

பச்சை பயறை நன்கு கழுவி 30 நிமிடம் நீரில் ஊற வைக்கவும்

பின்பு அதனை வடிகட்டி பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் நீா் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியே வைக்கவும்

பின்பு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்


பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உழுத்தம் பருப்பு மற்றும் கறி வேப்பிலை தாளிக்கவும்

பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்

நறுக்கிய காரட் சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்த்து காரட் வேகும் வலை நன்கு கிளறவும்

பின்பு பச்சை பயறு சேர்த்து நன்கு கிறவும்

பின்பு மல்லித் தளை சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு பரிமாறவும்

.