பச்சை பட்டாணி ரவா பாத் / Green Peas Semolina

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ரவை                      -      1 கப் (வறுத்தது)

தக்காளி                 -      3

பச்சை பட்டாணி       -      கால் கப்

மஞ்சள் தூள்             -      கால் டீஸ்பூன்

சோம்பு                   -      கால் டீஸ்பூன்

உப்பு                      -      தேவையான அளவு.

அரைப்பதற்கு:

தேங்காய் துருவல்         சிறிது

இஞ்சி                    -      ஒரு துண்டு

பச்சை மிளகாய்         –      2

 பச்சை  கொத்தமல்லி         சிறிது

உப்பு                      -      ஒரு சிட்டிகை.

தாளிப்பதற்கு:

நெய்                       -      1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்                -      1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை         -      தேவைக்கேற்ப

செய்முறை

ரவையை வறுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்துசோம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதுடன் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இத்துடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிறகு ரவையை சேர்த்துக் கிளறவும். வெந்ததும் நெய்யை ஊற்றி கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு பரிமாறவும். 

குறிப்பு: இந்த ரவா பாத் சிறிது தளர்த்தியாக இருந்தால் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tomato Health Benefits And Minerals

Green Peas Health Benefits And Minerals

.