கார , இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல் / FRUITS SUNDAL

Posted in தானிய வகை ரெசிபிகள்

 தேவையான பொருட்கள்

உலர்ந்த பச்சை பட்டாணி      -      1 கப் (பெரியது)

ஆப்பிள் அல்லது பேரிக்காய்    –      1 (மீடியம் சைஸ்)

உலர்ந்த திராட்சை                -      1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி துருவியது                -      1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்                  -      4 நறுக்கியது

பெருங்காயம்மிளகாய் தூள்   –      சிறிது 

எண்ணெய்                   -      2 டேபிள் ஸ்பூன்

கடுகுஉளுந்து                   -      அரை டீஸ்பூன்

வறுத்து பொடித்த சீரகத் தூள் -       அரை டீஸ்பூன்

எலுமிச்சை சாறு                -      1 டேபிள் ஸ்பூன்

உப்பு                               -      தேவையான அளவு

கறிவேப்பிலை               -      சிறிது நறுக்கியது

 கொத்தமல்லி தழை             -      சிறிது நறுக்கியது

 துருவிய மாங்காய்           -      1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து பின் வேக வைக்கவும். இஞ்சிஆப்பிளை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகுஉளுந்துபச்சை மிளகாய் கிள்ளிப் போட்டுஇஞ்சி சேர்த்து வதக்கியதும்மிளகாய்த்தூள்பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும். 

 பின்னர் வெந்த பட்டாணிஉப்புதுருவிய ஆப்பிள் போட்டு வதக்கி இறக்கவும். கொத்தமல்லிதிராட்சைகறிவேப்பிலைசீரகத்தூள்மாங்காய்த் துருவல்எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறி பரிமாறவும். 

 இது வித்தியாசமான வாசனையுடன் கார, இனிப்புபுளிப்புமாக இருக்கும். 

.