காராமணி சப்ஜி / RED BEANS SABZI / AZUKI BEANS SABZI

Posted in தானிய வகை ரெசிபிகள்

 

 தேவையான பொருட்கள்

காராமணி                        அரை கிலோ

பெரிய வெங்காயம்                  2

உருளைக்கிழங்கு                    2

தக்காளி                          3

பச்சை மிளகாய்                       2

இஞ்சி                                   ஒரு துண்டு

பூண்டு                            4 பல் 

கொத்தமல்லிபட்டை               சிறிதளவு

சோம்பு                                   அரை டீஸ்பூன்

பெரிய ஏலக்காய்                   2

கிராம்பு                            2

மஞ்சள் தூள்                        அரை டீஸ்பூன்

ஆம்சூர் பொடி                      அரை டீஸ்பூன்

மல்லித் தூள்                        அரை டீஸ்பூன்

எண்ணெய்                         2 டேபிள்ஸ்பூன்

உப்பு                                       தேவையான அளவு

செய்முறை

காராமணியை நன்றாக கழுவிஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

நான்கு துண்டு வெங்காயம்பூண்டுஇஞ்சிபட்டைசோம்புஏலக்காய்கிராம்புபச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். 

மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கிஎண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கிதண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள்உப்புஆம்சூர் பொடிதனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவைவதக்கிய வெங்காயம்உருளைக்கிழங்குபொடியாக நறுக்கிய தக்காளிகொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

Onion Health Benefits And Minerals

Potatoes health benefits and minerals

.