வாழைக்காய் பொரியல் / Plantain Poriyal

Posted in வாழைக்காய் ரெசிபி

தேவையான பொருட்கள்:

வாழைக்காய்        -   ஒன்று

தனியா               -   ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்     -     5

கடலைப்பருப்பு      -    2 தேக்கரண்டி

தேங்காய்  துருவல்  -   2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்          -    சிறிது

உப்பு                  -     தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய், கடுகுகறிவேப்பிலை 

செய்முறை:

வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து, பொடி செய்து கொள்ளவும்.

 வாழைக்காயை சதுரமாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.

 வதங்கியதும் வறுத்து பொடி செய்த கடலைப்பருப்பு பொடியைச் சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி.

Raw Banana (Green Plantain) Health Benefits And Minerals

.