நேந்திரங்காய் பொரியல் / Nendran Banana Poriyal

Posted in வாழைக்காய் ரெசிபிதேவையான பொருட்கள்

வாழைக்காய்           -       3

புளி                          -       நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள்           -       அரை டீஸ்பூன்

உப்பு                        -       தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய்      -       5

தனியா               -   1  1/2 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு      -       ஒரு டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு        -        ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்  துருவல்     -         1  1/2 டேபிள்ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -        1  1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு,                        -       அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு       -       ஒரு டீஸ்பூன்

எண்ணெய்           -       2 டீஸ்பூன்

கறிவேப்பிலை        -       சிறிது

காயத் தூள்             -       அரை டீஸ்பூன் 

செய்முறை:

 *வாழைக்காயை கழுவி இரண்டாக நறுக்குங்கள். 

*புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும் கொதி வந்ததும், வாழைக்காயைச் சேருங்கள். 

*வாழைக்காய் முக்கால் பதம் வெந்ததும் எடுத்து தோலுரித்து, சிவலில் வைத்து  சிவிகொள்ளுங்கள்.

*வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்கவறுத்து, பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். 

*மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து வாழைக்காய், உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி பொடியைதூவி நன்கு கிளற வேண்டும்.

* கிளறிய பிறகு சிறிது தேஙகாய் துருவல் சேர்த்து இறக்குங்கள்.

*இப்போது சவையான நேந்திரங்காய் பொரியல் ரெடி.!!!!

*உடல்நலத்திற்கு: பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

 Raw Banana (Green Plantain) Health Benefits And Minerals

.