வாழைக்காய் ப்ஃரை / Plantain Pan Fry

Posted in வாழைக்காய் ரெசிபி

தேவையான பொருட்கள்

வாழைக்காய்                      –        1

சாம்பார் பொடி            -       1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)

மஞ்சள்தூள்                     -       1/4 டீஸ்பூன்

உப்பு                                         -       தேவைக்கேற்றவாறு

எண்ணை                                 -       2 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

*வாழைக்காயின் தோலை சீவி விட்டு, 1/4 அங்குல கனத்திற்கு வட்ட வடிவில் வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு நன்றாக அலசி விட்டு, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். 

*அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு கையளவு தண்ணீரையும் தெளித்து நன்றாகப் பிசறி வைக்கவும். 

*ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பிசறி வைத்துள்ள வாழைக்காய் வில்லைகளைப் போட்டு கிளறி விடவும். ஒவ்வொரு துண்டுகளையும் தனித்தனியாகப் பரப்பி விட்டு, மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும். 

*அவ்வப்பொழுது மூடியைத் திறந்து கவனமாக வில்லைகளைத் திருப்பி விட்டு வேக விடவும். 

*காய் வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, காய் பொன்னிறமாக ஆகும் வரை திருப்பி விட்டு எடுக்கவும்.

*சுவையான வாழைக்காய்  ஃபேன்  ப்ஃரை  ரெடி.!!! இது சாப்பிட மிகமிக சுவையாக இருக்கும்.!! 

Raw Banana (Green Plantain) Health Benefits And Minerals

.