வாழைக்காய் பொரியல் / GREEN PLANTAIN FRY / RAW BANANA FRY

Posted in வாழைக்காய் ரெசிபி

தேவையான பொருட்கள்

வாழைக்காய்                –        3

தேங்காய் எண்ணெய்        –        1 மேஜைக்கரண்டி

வத்தல்மிளகாய்            –        1 - 2

கடுகு                        –        1/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு             –        1 தேக்கரண்டி

ஜீரகம்                       –        1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை             –        8-10

பெருங்காயம்                –        1 சிட்டிகை

நீர்                          –        தேவையான அளவு

தேங்காய் துருவல்          –        3 மேஜைக்கரண்டி

மல்லி தளை               –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

வாழைக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் நறுக்கிய வாழைக்காய்களை போடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். தீயை குறைத்து வைத்து கடுகு மற்றம் உழுத்தம் பருப்பு சேர்க்கவும். உழுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வைக்கவும்

பின்பு ஜீரகம் சேர்க்கவும்

வத்தல் மிளகாய், பெருங்காயம் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

வத்தல் மிளகாய் நிறம் மாறும் வரை நன்கு கிளறவும்

பின்பு வாழைக்காய் மற்றும் உப்பு சேர்க்கவும்

நீர் சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு கடாயை ஒரு மூடியால் மூடிவைத்து வேக வைக்கவும்

நீர் வற்றியிருந்தால் சிறிது நீர் சேர்த்து வேக வைக்கவும்.

வாழைக்காய் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்க்கவும்

நன்கு கிளறவும். பின்பு தீயை அணைத்து விடவும்.

மல்லித் தளை சேர்த்து நன்கு கிளறவும்

 

வாழைக்காய் பொரியல் ரெடி!!!!!!!

.