பீட்டூட் ரசம் / BEETROOT RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருட்கள்

பீட்ரூட்                      -      1

 புளி                        -      சிறிய நெல்லிக்காய் அளவு

ரசப்பொடி                   -      1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்            -      2

மஞ்சள் தூள்               -      1 தேக்கரண்டி

உப்பு                         –      தேவையான அளவு

வறுத்து அரைக்க

தேங்காய் எண்ணெய்       -      1 தேக்கரண்டி

மல்லி                      -      1 மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய்             -      4

ஜீரகம்                      -      1  தேக்கரண்டி

தேங்காய்                   -      ¼ கப்

கறிவேப்பிலை              -      5

தாளிக்க

தேங்காய் எண்ணெய்      -      1 தேக்கரண்டி

கடுகு,                     -      1 தேக்கரண்டி

பெருங்காயம்              -      1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை            -      ஒரு கொத்து

பூண்டு                    -      2 தேக்கரண்டி (நறுக்கியது)

செய்முறை

முதலில்   பீட்டூட்டை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்

காய்ந்த கடாயை எடுத்து அரைக்க தேவையான பொருட்களை எடுத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்

ஆறிய பிறகு வறுத்த பொருட்கள் மற்றும் வேகவைத்த பீட்டூட்டை  மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

அதனை விழுதாக நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு புளி தண்ணீரை சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்

நன்கு கலக்கவும் பின்பு 2 நிமிடம் சூடாக்கவும்

பின்பு தீயை குறைத்து வைக்கவும்

பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்

பின்பு தாளித்த எண்ணெயை ரசத்தில் ஊற்றவும்  

 

இப்போது சுவையான பீட்டூட் ரசம் ரெடி!!!!!!!!

.