லெமன் ரசம் / LEMON RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு        –        ½ கப்

நீர்                   –        1/2 கப் (பருப்பு வேக வைக்க)

நீர்                   –        4 கப்

தக்காளி              –        2

இஞ்சி                –        1 துண்டு

உப்பு                 –        தேவையான அளவு

மஞ்சள் தூள்         –        ஒரு சிட்டிகை

ரசம் தூள்            –        21/2 தேக்கரண்டி

மல்லித் தளை        –        கைப்பிடியளவு

நெய்                 –        2 தேக்கரண்டி

கறி வேப்பிலை      –        1 கொத்து

கடுகு                –        1/2 தேக்கரண்டி

ஜீரகம்               –        1/2 தேக்கரண்டி

வெந்தயம்           –        ஒரு சிட்டிகை

வத்தல் மிளகாய்     –        1

பெருங்காயம்        –        1 சிட்டிகை

எலுமிச்சை சாறு     –        1 (பெரிய எலுமிச்சை)

செய்முறை

பருப்பபை நன்கு கழுவி அதனுடன் 1/2 கப் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். அதிலுள்ள பிரஷர் முழுவதும் வெளியேறியதும் அவற்றை மசித்து தனியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி அதனுடன் நறுக்கிய தக்காளி, ரசம் பவுடர், இஞ்சி மற்றும் உப்பு சேர்க்கவும்.

தக்காளி மசியும் வரை வேக வைக்கவும். பின்பு கே வைத்து மசித்த பருப்பு சேர்க்கவும். உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். கொதி நிலைக்கு வரும் வரை வேக வைக்கவும்.

மல்லித் தளை சேர்க்கவும்.

ரசம் கொதிக்கும் போது ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம், கடுகு, வத்தல் மிளகாய் சேர்க்கவும். பின்பு கறி வேப்பிலை சேர்க்கவும். பின்பு பெருங்காயம் சேர்க்கவும்.

பின்பு அவற்றை ரசத்துடன் சேர்க்கவும். பின்பு தீயை அணைத்து விடவும்.

ஒரு எலுமிச்சையை பிழிந்து ரசத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

எலுமிச்சை ரசம் ரெடி!!!!!!!!

.