முருங்கக்காய் ரசம் / DRUMSTICK RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருள்கள்

முருங்கக்காய்                -       2

தக்காளி                      -       2

புளி                          -       சிறிய எலுமிச்சை அளவு

தண்ணீா்                     -       2 கப்

ரசப்பொடி                    -       3 தேக்கரண்டி

வெல்லம்                    -       அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள்                 -       ¼ தேக்கரண்டி

மிளகாய் தூள்                -       அரை தேக்கரண்டி

மல்லிஇலை                 -       ¼ கப்

உப்பு                        -       தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்        -       2 தேக்கரண்டி

காயந்த மிளகாய்            -       2

கடுகு                       -       அரை தேக்கரண்டி

வெந்தயம்                  -       1 தேக்கரண்டி

கறிவேப்பிலை              -       10

பெருங்காயம்               -       சிறிது

வெங்காயம்                -       250 கிராம்

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்

முருங்கக்காயை தோல் நீக்கி நீள வாக்கில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்

நறுக்கிய தக்காளியை மிக்ஸி ஜாரில் எத்துக்கொள்ள வேண்டும்

தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்

ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

சூடான பானில் தக்காளி விழுதை சோ்க்கவும்

முருங்கக்காய் சோ்க்கவும்

மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி சோ்க்கவும்

தண்ணீா் சோ்க்கவும்

வேகவைக்கவும்

புளியை கரைத்து எடுத்துக்கொள்ளவும்

புளி தண்ணீா் சோ்க்கவும்

ரசப்பொடி மற்றும் வெல்லம் சோ்க்கவும்

உப்பு சோ்க்கவும்

பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்

தாளிக்க தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

பானில் எண்ணெய் சூடாக்கி கடுகு உளுந்து சோ்க்கவும்

கடுகு மற்றும் உளுந்து சிவந்ததும் ஜீரகம் சோ்க்கவும்

காய்ந்த மிளகாய் வெந்தயம் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சோ்க்கவும்

தாளித்த எண்ணெய்யை ரசத்தில் சோ்க்கவும்

இறுதியில் மல்லிஇலை சோ்த்து மிக்ஸ் செய்து இறக்கவும்

 

இப்போது சுவையான முருங்கக்காய் ரசம் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.