நல்ல மிளகு ரசம் / PEPPER RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருட்கள்

நல்ல மிளகு           –        1 மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய்        –        2

பூண்டு                     –        6

புளி                     –        3 மேஜைக்கரண்டி

உப்பு                    –        தேகை்கு

நீர்                     –        தேவைக்கு

மல்லித்தளை        –        ஒரு கைப்பிடியளவு

தாளிக்க

நெய்                  –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                 –        1 தேக்கரண்டி

காயத் தூள்           –        ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை       –        1 கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

நல்ல மிளகு, வத்தல் மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்து உரலில் போடவும்

லேசாக இடித்துக் கொள்ளவும்

ஒரு பானில் சிறிது நெய் விட்டு சூடாக்கவும்

கடுகு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்

சிறிது கறி வேப்பிலை சேர்க்கவும்

பாதியளவு இடித்த நல்ல மிளகு, வத்தல் மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்துக் கொள்ளவும்

சிறிது நேரம் வதக்கவும்

புளித் தண்ணீர் சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

மீதமுள்ள இடித்த நல்ல மிளகு, வத்தல் மிளகாய் மற்றும் பூண்டினை சேர்த்துக் கொள்ளவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

ஒரு கைப்பிடியளவு மல்லித் தளை சேர்க்கவும்

பின்பு தீயை அணைத்து விட்டு சிறிது நேரம் அதனை மூடி வைக்கவும்

பின்பு பரிமாறவும்

Black Pepper Health Benefits And Minerals

.