தயிர் துவரம்பருப்பு ரசம் / CURD TURDAL RASAM

Posted in ரசம் வகைகள்

01 sun samayal curd rasam

தேவையான பொருட்கள்

தயிர்                  -      1 கப்

நீர்                    -      தேவையான அளவு

மஞ்சள்தூள்           -      1 தேக்கரண்டி

உப்பு                 –      தேவையான அளவு

அரைக்க

கொத்த மல்லி        -      1 மேஜைக்கரண்டி

துவரம் பருப்பு          -      1 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு தூள்     -      1 தேக்கரண்டி

சீரகம்                  -      1  தேக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்  -      1 தேக்கரண்டி

கடுகு,                   -      1 தேக்கரண்டி

சீரகம்                         -      1/2 தேக்கரண்டி

காயத் தூள்                 -      1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்        -      1 சிறிய துண்டுகளாக உடைக்கவும்

கறிவேப்பிலை         -      ஒரு கொத்து

செய்முறை

02 sun samayal curd rasam

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal curd rasam

இது அரைக்க தேவையான பொருட்கள்

04 sun samayal curd rasam

காய்ந்த கடாயை எடுத்து அரைக்க தேவையான பொருட்களை எடுத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்

06 sun samayal curd rasam

அதனை தூளாக நன்கு அரைத்துக் கொள்ளவும்

07 sun samayal curd rasam

பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது நீர் சேர்க்கவும்

08 sun samayal curd rasam

பின்பு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

09 sun samayal curd rasam

நன்கு கலக்கவும்

10 sun samayal curd rasam

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்

11 sun samayal curd rasam

நன்கு கலக்கவும்

12 sun samayal curd rasam

பின்பு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும்

13 sun samayal curd rasam

பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்

14 sun samayal curd rasam

பின்பு பெருங்காயத் தூள் சேர்க்கவும்

15 sun samayal curd rasam

சிறிது நேரம் வதக்கவும்

16 sun samayal curd rasam

பின்பு தீயை குறைத்து வைக்கவும்

17 sun samayal curd rasam

பின்பு தயிர் கலவையை சேர்க்கவும்

18 sun samayal curd rasam

நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்

19 sun samayal curd rasam

ஒரு முறை கொதித்ததும் தீயை அணைத்து விடவும்

01 sun samayal curd rasam

தயிர் ரசம் ரெடி

Whole Corriander Seeds Health Benefits and Minerals

Black Pepper Health Benefits And Minerals

.