எலுமிச்சை ரசம் / LEMON RASAM
தேவையான பொருட்கள்
நீர் – 2 கப்
எலுமிச்சை - 1 (நடுத்தர அளவு)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 தேக்கரண்டி
இடிக்க:
பச்சை மிளகாய் - 2
பூண்டு – 4 பற்கள்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, – 1 தேக்கரண்டி
காயத் தூள் – ¼ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்
பச்சை மிளகாய் சேர்த்து உரலில் போட்டு இலேசாக இடித்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்
அதனுடன் நீர் சேர்க்கவும்
எலுமிச்சை சாறு சேர்க்கவும்
மிளகாய் தூள், ஜீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்
உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
;பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
;தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும்
பின்பு காயப் பொடி சேர்க்கவும்
நன்கு கிளறவும்
பின்பு ரசத்தை அதனுடன் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
கொதிக்க வைக்கவும்
கொதித்ததும் இறக்கவும்;