முருங்கைக் காய் சாம்பார்

Posted in குழம்பு வகைகள்

sun samayal sambar recipe

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு              -       1 டம்ளர் (மஞ்சள் பொடியுடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்)

மஞ்சள் பொடி             -       1 தேக்கரண்டி

புளி                       -       1 எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)

சாம்பார் பொடி             -       2 தேக்கரண்டி

உப்பு                      -       தேவையான அளவு

காய்கறிகள்                -       கலவையாக 1/4 கிலோ நறுக்கிக்கொள்ளவும் – (அவரைக்காய்,

பரங்கிக்காய், பூசணிக்காய் ,முருங்கைக் காய், பீன்ஸ், சேம்பக் கிழங்கு, காரமில்லாத மிளகாய், காரட், )

மொச்சை (or) பட்டாணி     -       1 கப்

வறுத்து அரைக்க :

மிளகாய் வற்றல்           -       5

தனியா                    -       2 தேக்கரண்டி

கடலை பருப்பு             -       2 தேக்கரண்டி

பெருங்காயம்              -       1 துண்டு

வெந்தயம்                 -       1 தேக்கரண்டி

தேங்காய்                         1/2 மூடி

எண்ணை                 -       தேவையான அளவு

கடுகு                     -       1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தழை        -       சிறிது

செய்முறை :

நறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.

பிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.

கடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

.