பாசிப் பருப்பு குழம்பு / MOONG DAL CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

பாசிப்ருப்பு              –        1/2 கப்

நீர்                     –        11/2 கப்

நெய்                   –        2 தேக்கரண்டி

ஜீரகம்                  –        1/2 தேக்கரண்டி

கடுகு                   –        1/2 தேக்கரண்டி

வத்தல் மிளகாய்        –        1

பச்சை மிளகாய்         –        2

இஞ்சி பூண்டு விழுது    –        1 தேக்கரண்டி

கறி வேப்பிலை         –        1 கொத்து

வெங்காயம்            –        1

தக்காளி                –        1

பெருங்காயம்           –        ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள்           –        2 சிட்டிகை

உப்பு                   –        தேவையான அளவு

நீர்                     –        3/4 கப்

கரம் மசாலா           –        2 சிட்டிகை

வெந்தயக் கீரை        –        1/2 தேக்கரண்டி

மாங்காய் தூள்         –        1/2 தேக்கரண்டி

மல்லித் தளை         –        கைப்பிடியளவு

செய்முறை

பருப்பை நீரினால் நன்கு கழுவவும். பின்பு அதனுடன் 1/2 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வைத்து வேக வைக்கவும்.

2 விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, ஜீரகம் மற்றும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்.

கடுகு பொட்டியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்த்து இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

 

பின்பு வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வேக வைக்கவும்.

மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி மசிந்ததும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்பு 3/4 கப் நீர் சேர்க்கவும்.

பின்பு வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்.

பின்பு மல்லித் தளை மற்றும் மாங்காய் தூள் சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

பாசிப் பருப்பு குழம்பு ரெடி!!!!!!!!!!

.