வெந்தயகீரை குழம்பு / FENUGREEK LEAVES CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

வெந்தயகீரை                      -      2 கப்

வேகவைத்த பச்சை பட்டாணி      -      60 கிராம்

கிரீம்                              -      1கப்

தேங்காய் எண்ணெய்               -      2 தேக்கரண்டி

உப்பு                              -      தேவையான அளவு 

அரைக்க

வெங்காயம்                        -      1

ஜீரகம்                             -      1 தேக்கரண்டி

பூண்டு                             -      4 பல்

இஞசி                             -      1 இஞ்

முந்திரிபருப்பு                      -      அரை கப்

மல்லி இலை                      -      சிறிது

செய்முறை

முதலில்  வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துகொள்ள வேண்டும்

மிக்சி ஜாரில் அரைக்க தேவையான பொருட்களை எடுத்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்

முந்திரி பருப்பு சோ்க்க வேண்டும்

மீண்டும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் எடுத்து எண்ணெய் சூடானதும் அரைத்த விழுதை சோ்க்க வேண்டும்

விழுது சிவக்கும் வரை வதக்க வெண்டும்

சுத்தம் செய்த வெந்தய கீரை மற்றும் தண்ணீா் சோ்க்க வேண்டும்

நன்றாக கலக்க வேண்டும்

மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்

பின் வேகவைத்த பச்சை பட்டாணி சோ்க்க வேண்டும்

கிரீம் சோ்க்கவும்

உப்பு சோ்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து  மல்லி இலை சோ்த்து எடுக்கவும்.

இப்போது சுவையான வெந்தயகீரை  குழம்பு ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!

.