சர்க்கரை வள்ளிக் கிழங்கு குழம்பு / SWEET POTATO CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளி கிழங்கு             –       2 கப்

வெங்காயம்                          –       1 கப்

தக்காளி                              –       1 கப்

பச்சை மிளகாய்                      –       1

இஞ்சி                                –       1 தேக்கரண்டி (துருவியது)

மல்லி தூள்                          –       11/2 தேக்கரண்டி

கரம் மசாலா                         –       1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்                       –       1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                        –       1/8 தேக்கரண்டி

உப்பு                                 –       தேவையான அளவு

எண்ணெய்                           –       தேவையான அளவு

கடுகு                                –       1/4 தேக்கரண்டி

ஜீரகம்                               –       1/2 தேக்கரண்டி

பெருங்காயம்                         –       ஒரு சிட்டிகை

செய்முறை

சர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்கு கழுவி தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். அதனை உப்பு நீரில் ஊற வைக்கவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தை தாளிக்கவும். கறி வேப்பிலை சேர்க்கவும். பின்பு இஞ்சி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஊற வைத்த நீர் சேர்க்கவும்

கிழங்கு வேகும் வரை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு குழம்பு ரெடி!!!!!

 

 

.