காலிஃப்ளவர் மசாலா குழம்பு / CAULIFLOWER MASALA CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்          –        250 கிராம்

வெங்காயம்           -       1 கப்

இஞ்சி                –        1 இன்ஞ் துண்டு

பூண்டு               –        3 பற்கள் 

பாதாம்               –        8

பச்சை மிளகாய்       –        1

தக்காளி              –        3/4 கப்

எண்ணெய்            –        2 மேஜைக்கரண்டி

பே லீஃப்              –        1

பட்டை               –        1

ஏலக்காய்             –        1

கிராம்பு               –        2

மிளகாய் தூள்         –        3/4 தேக்கரண்டி

கரம் மசாலா          –        1/2 தேக்கரண்டி

மல்லி தூள்         –        1 தேக்கரண்டி

வெந்தயக் கீரை       –        1/2 தேக்கரண்டி

உப்பு                 –        தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்துடன் 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி தனியே வைக்கவும். பின்பு 3 கப் நீரை சூடாக்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு உப்பு சேர்க்கவும். அதில் சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது நேரம் ஊற வைத்து பின் வடிகட்டிக் கொள்ளவும்

பின்பு மிக்சியில் வெங்காயம், தக்காளி, பாதாம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்

நீர் சேர்க்காமல் மென்மையான வழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.ஏலக்காய், கிராம்பு, பட்டை, பே லீஃப் சேர்க்கவும்.

அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

கலவை சிறிது கெட்டியானதும் மிளகாய் தூள் மற்றம் கரம் மசாலா தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

கலவை கெட்டியாகும் வரை மற்றும் மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்.

அதனுடன் காலிஃப்ளவர் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

3/4 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதனை மூடி வைத்து மிதமான தீயில் காலிஃப்ளவர் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

பின்பு வெந்தயக் கீரை சேர்க்கவும். 1 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு மூடி வைக்கவும். பின்பு மல்லித் தளை சேர்க்கவும். 

காலிஃப்ளவர் மசாலா குழம்பு ரெடி!!!!!!!!

.